/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது
/
வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது
வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது
வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது
ADDED : மே 02, 2024 09:19 PM
திருத்தணி:திருத்தணி பாரதி தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் மகன் விஜய், 23. ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று மதியம் தன் ஆட்டோவில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு, மலைக்கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவின் முன்னே சென்ற கார், ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றதால், ஆட்டோ ஓட்டுனர் விஜய் முந்து சென்றார்.
இதனால் காரில், சென்ற ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் போடிபேட்டையை சேர்ந்த முனிரத்தினம், 55, என்பவர் ஆட்டோ ஓட்டுனரிடம் தகராறு செய்தனர்.
இதையடுத்து, முனிரத்தினம் மற்றும் அவருடன் காரில் வந்த தங்கவேல், 41, வசந்தகுமார், 30 மற்றும் ஆட்டோ ஓட்டுனர் விஜய்க்கு ஆதரவாக திருத்தணி பகுதி சேர்ந்த ராஜ்,34, ஆனந்தபாபு, 31, பார்த்திபன், 21, ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக் கொண்டனர். காயமடைந்த விஜய் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஆறு பேரை கைது செய்தனர்.