/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பர்மிட் இல்லாத 6 வாகனங்கள் பறிமுதல்
/
பர்மிட் இல்லாத 6 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 09, 2024 06:48 AM

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் தமிழக-- - ஆந்திர மாநில எல்லையான போக்குவரத்து சோதனை சாவடி இயங்கி வருகிறது.
இந்த சோதனை சாவடி வழியாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வருவதற்கும், தமிழகத்திற்கு டூரிஸ்ட் பர்மிட் மற்றும் வரி செலுத்த வேண்டும்.
இந்நிலையில், இணைப் போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் ஆகியோர் உத்தரவின்படி நேற்று அதிகாலை முதல் மதியம் வரை பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பயணியரை ஏற்றி சென்ற, கார், வேன்களை நிறுத்தி சோதனை செய்தார்.
இதில் சொந்த வாகனங்களை, உரிய அனுமதிச்சீட்டு பெறாமல், வாடகை வாகனமாக பயன்படுத்தி வந்ததை கண்டறிந்து, ஆறு வாகனங்களை பறிமுதல் செய்தார்.

