ADDED : ஜூன் 07, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் தணிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, பொன்னேரியில் 7 செ.மீட்டர் மழை பதிவாகியது. ஆர்.கே.பேட்டை - 2.5, ஆவடி - 2.1, செங்குன்றம் - 2.0, கும்மிடிப்பூண்டி - 1.7, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி - 1.5, திருவாலங்காடு - 0.8, ஊத்துக்கோட்டை - 0.6 செ.மீட்டர் மழை பதிவாகியது.
திருவள்ளூர், திருத்தணி உட்பட மாவட்டத்தின் சில இடங்களில் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ததால், ஒரு மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.