/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
8 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய மூவர் கைது
/
8 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய மூவர் கைது
ADDED : மார் 28, 2024 10:23 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்பாய், 28, பதுமான், 22, ஆகியோரிடம், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆந்திர மாநில அரசு பேருந்தில், பயணித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அலி, 23, என்பவரிடம், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்த, 8 கிலோ கஞ்சா, கடத்திய மூவரும், கும்மிடிப்பூண்டி கலால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கலால் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
l திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
வேனில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, 480 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் வேன் ஓட்டுனர், நாகப்பட்டினம் மாவட்டம் உமையல்புரம் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 35 என்பவரை கைது செய்தனர். பிடிப்பட்ட குட்கா பொருட்கள் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

