/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் 974 மனுக்கள் குவிந்தன
/
மக்களுடன் முதல்வர் முகாம் 974 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 07, 2024 11:16 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கத்தில் உள்ள சமுதாய கூடத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், கொப்பூர், வலசை வெட்டிக்காடு, வெள்ளேரிதாங்கல், இலுப்பூர், புதுவள்ளூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்
கடம்பத்துார் அ.தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
முகாமில், வருவாய்த்துறை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்றனர்.
முகாமில் 345 ஆண்கள் 629 பெண்கள் என, மொத்தம் 974 பகுதிவாசிகள் வீட்டு மனை பட்டா, புதிய மின் இணைப்பு என, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளதாக ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.