/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் பேரலில் மூழ்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு
/
தண்ணீர் பேரலில் மூழ்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : ஏப் 30, 2024 10:08 PM
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தீபக், தீபான்ஷி தம்பதியின் மகள் சுபலட்சுமி, 6. கணவன் தீபக் இறந்த நிலையில், இரண்டாவதாக தினேஷ் என்பவரை திருமணம் செய்தார்.
இரண்டாவது கணவருடன், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரில் தீபான்ஷியும், அவரது மகள் சுபலட்சுமியும் வசித்து வந்தனர்.
நேற்று மாலை மாயமான சிறுமி சுபலட்சுமியை, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடிய போது, வீட்டின் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் பேரலில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தார். இந்நிலையில், சிறுமி விளையாடிய போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.