/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர்கள் சாலை மறியல் 74 பேர் மீது வழக்கு பதிவு
/
ஆசிரியர்கள் சாலை மறியல் 74 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 04, 2024 09:22 PM
திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி சங்கத்தின் சார்பில், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கடம்பத்துார், பூண்டிமற்றும் திருவள்ளூர் ஆகிய 7 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில், 23 பெண் ஆசிரியைகள், 51 ஆண் ஆசிரியர்கள் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பிய பின், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், ம.பொ.சி.சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருத்தணி நகர நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் 74 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிந்தனர்.