/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதுமக்கள் மீது கல் வீசிய கஞ்சா போதை வாலிபர்
/
பொதுமக்கள் மீது கல் வீசிய கஞ்சா போதை வாலிபர்
ADDED : மே 05, 2024 11:04 PM
ஆவடி: ஆவடியில், கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர், போலீஸ்காரர் ஒருவரை கல்லால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் லோகேஷ், 19.
இவர், நேற்று முன்தினம் கஞ்சா போதையில், சாலையில் சென்ற பொதுமக்கள் மீது கற்கள் வீசி தாக்கியுள்ளார்.
புகாரின்படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தலைமை போலீஸ்காரர் சரவணன், போதையில் இருந்த லோகேஷை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அடங்காததால், கட்டையால் அடித்து அவரை கட்டுப்படுத்த முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த லோகேஷ், சாலையில் கிடந்த கல்லால் போலீஸ்காரர் சரவணனை தாக்க முற்பட்டார். சுதாரித்த சரவணன், லோகேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
ஆவடி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பின் எச்சரித்து அனுப்பினர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.