/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இணைப்பு சாலை ஓரத்தில் பராமரிப்பு இல்லாத கால்வாய்
/
இணைப்பு சாலை ஓரத்தில் பராமரிப்பு இல்லாத கால்வாய்
ADDED : ஜூலை 21, 2024 06:52 AM

சோழவரம்: சோழவரம் அடுத்த காரனோடை, ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம் பகுதிகளில். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரங்களில், மழைநீர் செல்வதற்காக கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மழைக்காலங்களில், சாலை, குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் மழைநீர் கால்வாய் வழியாக அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றிற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டன.
இவை உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கால்வாய்கள் சேதம் அடைந்தும், குப்பை, கழிவுகள் தேங்கியும் கிடக்கின்றன.
ஒரு சில இடங்களில மண் துார்ந்து கால்வாய் இருப்பதே தெரியாத நிலையும் உள்ளது. குடியிருப்பு, வணிக வளாகங்களின் குப்பை, கழிவுகளும் கால்வாய் அருகிலேயே கொட்டி குவிக்கப்படுகிறது. இதனால் துர்நாற்றமும் ஏற்படுகிறது
மழைக்காலங்களில் கால்வாய்கள் வழியாக மழைநீர் செல்லாமல் இணைப்பு சாலைகளில் தேங்கி, போக்குவரத்திற்கும் பாதிப்பு உண்டாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கால்வாய்கள் துார்வாரப்படாமல் அதே நிலையில் இருக்கின்றன.
கால்வாய்களை உரிய முறையில் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.