/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெங்களூரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் கைது
/
பெங்களூரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் கைது
ADDED : மே 09, 2024 01:16 AM
திருவள்ளூர்:பெங்களூரைச் சேர்ந்தவர் நந்தினி, 23. என்பவருக்கும், திருவள்ளூர் அடுத்த ஈக்காடைச் சேர்ந்த அக் ஷய குமார், 28, என்பவருக்கும் 'இன்ஸ்டா' வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் திருப்பதி சென்று தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நந்தினியை திருமணம் செய்ய அக் ஷய குமார் மறுத்துள்ளார். இதனால், நந்தினி நேற்று முன்தினம் திருவள்ளூர் ஈக்காடு பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு வந்து கேட்டபோது, அக் ஷய குமார் அவரை சாவியால் தாக்கி, கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார், அக் ஷய குமாரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.