/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலி நகையுடன் வந்தவரை மடக்கிய அடகு கடைக்காரர்
/
போலி நகையுடன் வந்தவரை மடக்கிய அடகு கடைக்காரர்
ADDED : மே 30, 2024 12:24 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதியைச் சேர்ந்த பிரகாஷ், 28. இவர், அதே பகுதியில் அடகுக்கடை வைத்துள்ளார்.
இவருடைய கடைக்கு, நேற்று முன்தினம் இரவு வந்த நபர் ஒருவர், தங்க மோதிரத்தை அடகு வைத்து, 17,1--00 ரூபாய் பணம் வாங்கி சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, அடகு வைத்த மோதிரத்தை பிரகாஷ், சோதித்து பார்த்தார். அப்போது, தங்க மூலாம் பூசிய, ஸ்டீல் மோதிரம் என, தெரியவந்தது.
அவர் கொடுத்த மொபைல் போன் எண்ணிற்கு அழைத்த போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று காலை, அதே நபர, தங்க மாட்டல்கள் இருப்பதாகவும், அடகு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடை உரிமையாளர், போலி நகைகளை அடகு வைத்தவரை பிடித்து வைத்துக் கொண்டு, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து விசாரித்ததில், தண்டையார்பேட்டை, படேல் நகரைச் சேர்ந்த காதர் மொய்தீன், 35, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் 17,100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.