/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போந்தவாக்கத்தில் புதர் சூழ்ந்த ஆரம்ப சுகாதார மையம்
/
போந்தவாக்கத்தில் புதர் சூழ்ந்த ஆரம்ப சுகாதார மையம்
போந்தவாக்கத்தில் புதர் சூழ்ந்த ஆரம்ப சுகாதார மையம்
போந்தவாக்கத்தில் புதர் சூழ்ந்த ஆரம்ப சுகாதார மையம்
ADDED : ஆக 18, 2024 01:50 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது துணை ஆரம்ப சுகாதார மையம். இந்த மையத்தை போந்தவாக்கம், அனந்தேரி, புதுச்சேரி, நந்திமங்களம், பிரசன்ன ராமேஸ்வரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறிய அளவில், சிமென்ட் ஓடு போட்ட கட்டடத்தில் இயங்கி வரும் இந்த ஆரம்ப துணை சுகாதார மையத்தை சுற்றி புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், இந்த மையத்திற்கு செல்லும் சாலையில் செடிகள் வளர்ந்துள்ளதால், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது.
சமீபத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில், மேற்கண்ட சுகாதார மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபுவிடம் கோரிக்கை மனு வழங்கினர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

