/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுட்டெரிக்கும் வெயில் கூரை இல்லாத நிழற்குடை
/
சுட்டெரிக்கும் வெயில் கூரை இல்லாத நிழற்குடை
ADDED : மே 03, 2024 11:49 PM

கடம்பத்துார்:தண்டலம் - - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சி. இங்குள்ள காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை கடந்த, 2013ம் ஆண்டு சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது
பின் 2016ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தும் எட்டு ஆண்டுகளாகியும் இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பயணியர் அமருவதற்கு இருக்கைகள் அமைத்த ஊராட்சி நிர்வாகம் கூரை அமைக்கவில்லை.
இதனால், மப்பேடு கூட்டு சாலை பகுதியில் காத்திருக்கும் பயணியர் மற்றும் மாணவ -- மாணவியர் வெயில், மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என மப்பேடு பகுதிவாசிகள் மற்றும் மாணவ -- மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.