/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பக்க விளைவு ‛'எத்தனால்' டேங்கர் லாரிகள் காத்திருப்பு
/
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பக்க விளைவு ‛'எத்தனால்' டேங்கர் லாரிகள் காத்திருப்பு
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பக்க விளைவு ‛'எத்தனால்' டேங்கர் லாரிகள் காத்திருப்பு
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பக்க விளைவு ‛'எத்தனால்' டேங்கர் லாரிகள் காத்திருப்பு
ADDED : ஆக 08, 2024 02:49 AM

கும்மிடிப்பூண்டி:வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் 'எத்தனால்' டேங்கர் லாரிகள் தமிழக எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவற்றை உடனுக்குடன் விடுவிக்க தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து டேங்கர் லாரிகள் வாயிலாக, சென்னையில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 'எத்தனால்' ஏற்றி வரப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து, 'எத்தனால், மெத்தனால்' பயன்பாட்டில் தமிழக அரசு பல கெடுபிடிகளை கடைப்பிடித்து வருகிறது.
சட்டவிரோத 'எத்தனால்' பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு எத்தனால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள், தமிழக எல்லையில் நிறுத்தப்படுகின்றன. ஆவண தணிக்கை செய்த பின், அவை செல்லும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அந்த சோதனைச்சாவடி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து, தினமும் 20க்கும் மேற்பட்ட எத்தனால் டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு வருகின்றன.
அவை, எளாவூர் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு, ஆவண தணிக்கை செய்த பின், செல்லும் இடம் உறுதி செய்யப்படுகிறது. 10 டேங்கர் லாரிகள் சேர்ந்தவுடன், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பாதுகாப்பில், சென்னையில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வேலை பளு கூடும் நாட்களில், அன்றைய தினம் எத்தனால் டேங்கர் லாரிகள் மேற்கண்ட சோதனைச்சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில நேரம் இரு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக டேங்கர் லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், உரிய நேரத்தில் எத்தனாலை கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட சோதனைச்சாவடியில், 20க்கும் மேற்பட்ட எத்தனால் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
தமிழக எல்லையில் நாட் கணக்கில் காத்திருப்பதை தவிர்த்து, உடனுக்குடன் விடுவிக்க, தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.