ADDED : ஜூன் 24, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளவேடு : வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு பகுதியிலிருந்து பட்டாபிராம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரி அருகே நேற்று முன்தினம் இரவு ஸ்பிளெண்டர் இரு சக்கர வாகனத்தில் சென்ற 30 வயது மதிக்கதக்கவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலியானார்.
இதுகுறித்து பகுதிவாசிகள் கொடுத்த தகவலின்படி வெள்ளவேடு போலீசார் சடலத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருவதாக வெள்ளவேடு போலீசார் தெரவித்தனர்.