ADDED : ஜூலை 09, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 30.
கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் மேலாளராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம், கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில் டூ-- வீலரில் சென்றுக்கொண்டிருந்தார். சாலையோர தடுப்பில் மோதி பலத்த காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் பொன்னேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அன்று இரவு உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.