/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை
/
மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை
ADDED : ஆக 17, 2024 07:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, கொசவன்பேட் டை எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர்கள் முருகவேல், 34, நாகராஜ், 44. இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு பாம்பு பிடிக்க சென்றனர். வழியில் இருவரும் மது குடித்தனர். செல்லும் வழியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி ஆத்திரமடைந்த நாகராஜ், முருகவேலை கீழே தள்ளி அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த முருகவேல், சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரியபாளையம் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.