/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சண்டையை விலக்கிய வாலிபருக்கு கத்திக்குத்து
/
சண்டையை விலக்கிய வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஏப் 28, 2024 06:40 AM
வேளச்சேரி : வாகனங்கள் உரசிக் கொண்ட பிரச்சனையில் ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்ட கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தினர்.
வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் அஜய், 20; கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் பிரகாஷ், 24, என்பவருடன், வேளச்சேரி - -தரமணி நுாறடி சாலையில் உள்ள டீ கடைக்குச் சென்றார்.
அங்கு, வாகனங்கள் உரசிக் கொண்ட பிரச்னையில், இரண்டு தரப்பினர் சண்டையிட்டுள்ளனர். அஜய், பிரகாஷ் அவர்களை சண்டையில் இருந்து விலக்கி விட முயன்றனர்.
அப்போது, அதில் ஒரு தரப்பைச் சேர்ந்த மூன்று பேர், இவர்கள் இருவரிடம் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தரமணி, கல்லுக்குட்டையைச் சேர்ந்த திலிப், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அஜய்யை சரமாரியாக குத்தினார்.
பலத்த காயமடைந்த அஜய், மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். தகவலின்படி வந்த வேளச்சேரி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட திலிப், 20, ராமமூர்த்தி, 18, ஆகிய இருவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

