நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் காமினி, 22.
சென்னை போரூர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 8ம் தேதி பணிக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து இவரது தாய் கங்கையம்மாள் கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.