தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தலைமறைவு ரவுடி கைது

தலைமறைவு ரவுடி கைது

தலைமறைவு ரவுடி கைது


ADDED : ஜூன் 05, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காசிமேடு, ஜூன் 6–

கொலை முயற்சி வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ரவுடியை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

காசிமேடு, சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் பிரதீப், 22. இவர், 2023ல் கொலை முயற்சி வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின், ஜாமினில் வெளியே வந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவானார்.

அதையடுத்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அவருக்கு பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், பிரதீப்பை தேடி வந்த காசிமேடு போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us