/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மே 1ல் விடுமுறை அளிக்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
மே 1ல் விடுமுறை அளிக்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மே 1ல் விடுமுறை அளிக்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மே 1ல் விடுமுறை அளிக்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : மே 02, 2024 09:19 PM
திருவள்ளூர்:மே 1ல் விடுமுறை அளிக்காத, 58 நிறுவனம் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில், தொழிலாளர் தினமான மே 1 ல் அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்க, கூடுதல் தலைமைச் செயலர் குமார்ஜெயந்த் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து, திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர்-அமலாக்கம் ஷோபனா தலைமையிலான ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டம் மற்றும் விதிமுறைபடி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, 58 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ஷோபனா கூறியதாவது:
தேசிய விடுமுறை தினங்களில் தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.