/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் தடுக்க அ.தி.மு.க., பிரசாரம்
/
போதை பொருள் தடுக்க அ.தி.மு.க., பிரசாரம்
ADDED : ஜூலை 13, 2024 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ரமணா தலைமை வகித்து, பொதுமக்களிடம் போதைப் பொருள் தடுப்பு வலியுறுத்தி, துண்டுப்பிரசுரம் வழங்கினார். கடைகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பாலாஜி, நகர செயலர் கந்தசாமி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.