நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 28. மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார்.
கடந்த 18 ம் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து இவரது சகோதரி சாந்தி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
l திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மனைவி ஸ்ரீதேவி, 48. இவர், அம்பத்துாரில் உள்ள ேஹாட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் முருகையன் கடம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.

