நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், முருகஞ்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீண்குமார், 19. இவர், தனியார் ஹார்டுவேர் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் ரேவதி மணவாளநகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.