/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய நிலத்தில் தக்கைபூண்டு பயிரிட வேளாண் துணை இயக்குனர் ஆலோசனை
/
விவசாய நிலத்தில் தக்கைபூண்டு பயிரிட வேளாண் துணை இயக்குனர் ஆலோசனை
விவசாய நிலத்தில் தக்கைபூண்டு பயிரிட வேளாண் துணை இயக்குனர் ஆலோசனை
விவசாய நிலத்தில் தக்கைபூண்டு பயிரிட வேளாண் துணை இயக்குனர் ஆலோசனை
ADDED : ஏப் 28, 2024 02:11 AM
திருவள்ளூர்:மண்ணின் வளத்தை பெருக்க தக்கை பூண்டு செடி பயிரிடுமாறு, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிரினை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். பயிர்கள் நன்கு வளர விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ரசாயன உரங்களால் நாளடைவில் மண்வளம் நிரந்தரமாக பாதிக்கும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க மண்வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில் மண்ணுக்கு வேர்ச்சத்தை கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும்.
குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன் இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன் உள்ள இடைவெளியில் மண்ணின் வளத்தை இயற்கையாக பெருக்க, தக்கை பூண்டு பயன்படுகிறது. இச்செடிகள் 45-80 நாட்களில் நன்கு வளர்ந்து விடும்.
ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை போதுமானது. தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும். இச்செடிகளின் வேர் முடிச்சுகளில். 80 சதவீதமும், இலைகளில் 30 சதவீதமும் வேர்ச்சத்து உள்ளது. நன்கு வளர்ந்த செடிகளை பறிப்பதற்கு முன்பாக, அதனை மடக்கிவிட வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை இதை பயிரிட்டு நன்கு வளர்ந்த செடிகளை பறிப்பதற்கு முன்பாக, டிராக்டர் கொண்டு உழுது விடுவதால், செடிகள் மண்ணோடு மண்ணாகி நிலத்துக்கு தேவையான வேர்சத்து பெருகி பயிர்கள் ஊட்டம் பெறும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

