/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேற்காடில் கூவம் ஆக்கிரமிப்பை அகற்ற மீண்டும் 'நோட்டீஸ்'
/
திருவேற்காடில் கூவம் ஆக்கிரமிப்பை அகற்ற மீண்டும் 'நோட்டீஸ்'
திருவேற்காடில் கூவம் ஆக்கிரமிப்பை அகற்ற மீண்டும் 'நோட்டீஸ்'
திருவேற்காடில் கூவம் ஆக்கிரமிப்பை அகற்ற மீண்டும் 'நோட்டீஸ்'
ADDED : ஜூலை 30, 2024 07:02 AM

திருவேற்காடு: திருவேற்காடில், கூவம் கரையோரம் உள்ள பெருமாள் கோவில் தெருவில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த வீடுகள், கூவம் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை கணக்கெடுப்பில் தெரிந்தது.
இதனால், இங்குள்ள வீடுகளை அகற்ற, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர், கடந்த மே மாதம் 'நோட்டீஸ்' வழங்கினர்.
நான்கு தலைமுறையாக, இப்பகுதியில் வசித்து வருவதாக கூறி, இப்பகுதிவாசிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை இரண்டாவது முறையாக, திருவள்ளூர் ஆர்.டி.ஓ., கற்பகம் தலைமையில், நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையால், 'ஏழு நாட்களுக்குள் மேற்படி நிலத்தை காலி செய்ய வேண்டும்' என, அங்குள்ள 160 வீடுகளில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.
அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.