/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய கருவிகள்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய கருவிகள்
ADDED : ஆக 22, 2024 06:44 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் விவசாயம் அதிகளவில் செய்து வருகின்றனர். விவசாயிகள் நெல், கரும்பு, சவுக்கு, வேர்கடலை, காய்கறி மற்றும் பூ போன்ற பயிர்கள் பயிரிடுகின்றனர். தற்போது விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் இயந்திரம் மூலம் ஏர் உழுதல், களை எடுத்தல், நெல் அறுவடை செய்தல் போன்ற பெரும்பாலான வேலைகள் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்கின்றனர்.
விவசாயிகள் நலன் கருதி விவசாய கருவிகளுக்கு வேளாண் பொறியியல் துறையின் சார்பில், 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது.
இது குறித்து திருத்தணி வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ராஜவேல் கூறியதாவது: திருத்தணி ஒன்றியத்தில் விவசாயிகள் நலன்கருதி, பவர் டில்லர், பவர் வீடர், டிராக்டர், ரோட்டோவிட்டர், ஏர் கலப்பை உள்பட பல்வேறு வேளாண் கருவிகள், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேற்கண்ட இயந்திர கருவிகள் தேவைப்படும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, பேன்கார்டு, ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் விண்ணப்பம் செய்தால், மானிய விலையில் விவசாய கருவிகள் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.