/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொளுத்தும் வெயிலால் விவசாய பணிகள் பாதிப்பு
/
கொளுத்தும் வெயிலால் விவசாய பணிகள் பாதிப்பு
ADDED : மே 05, 2024 10:58 PM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள, 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.
விவசாயிகள், நெல், வேர்கடலை, கரும்பு, காய்கறி மற்றும் பூ போன்ற பயிர்கள் அதிகளவில் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த, 20 நாட்களுக்கு மேலாக திருத்தணி பகுதியில் தினமும், வெயில் கொளுத்தி வருகிறது. காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:00 மணி வரை வெயில் கொளுத்துவதாலும், அனல் காற்று வீசுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வெயிலில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர். வெயிலுக்கு பயந்து விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருவதில்லை. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பூ பயிரிட்ட விவசாயிகள், பூக்கள் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
அதே நேரத்தில் மல்லி பூ பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் வெயிலுக்கு பயந்து, பணிகளை ஒத்தி வைத்துள்ளனர்.