/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி கூட்டம்
/
கும்மிடிப்பூண்டியில் அனைத்து கட்சி கூட்டம்
ADDED : மார் 21, 2024 09:18 AM

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், போலீசார் சார்பில் அனைத்து கட்சி, வியாபாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கான கூட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், தாசில்தார் பிரீத்தி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் முருகன், டில்லிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், டாஸ்மாக் ஊழியர்கள் என, 75 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து டி.எஸ்.பி., கூறினார்.
இரவு 10:00 மணிக்கு கடைகளை அடைக்க வேண்டும் என, வியாபாரிகளை தகாத வார்த்தைகளில் போலீசார் பேசக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கட்சியினர் பெற வேண்டிய அனுமதிகள் தொடர்பான வேலைகளை எளிதாக்க வேண்டும்.
தேர்தல் முடியும்வரை, அனுமதி பெறாமல் காலை முதல் இரவு வரை சட்டவிரோதமாக சரக்கு விற்பனை செய்து வரும் குடிமையங்களை மூட வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் பங்கேற்றவர்கள், போலீசாரிடம் தெரிவித்தனர்.

