/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மனேரி ஏரிக்கரை சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
அம்மனேரி ஏரிக்கரை சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 05:54 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி கிராமத்தின் கிழக்கில், கொண்டாபரம் கிராமத்திற்கு மேற்கில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு தார் சாலை வசதி உள்ளது.
இந்த வழியாக பகுதிவாசிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர். சோளிங்கருக்கு செல்ல இந்த பாதை வசதியாக விரைவு சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையை தவிர்த்தால், 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு ஆர்.கே.பேட்டை வழியாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், இந்த பகுதியில் உள்ளவர்கள், பெரும்பாலும், இந்த ஏரிக்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரிக்கரை மீதான தார் சாலை முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது குண்டும் குழியுமாக உள்ளது.
பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால், அதன் ஆழத்தை வாகன ஓட்டிகளால் கணிக்க முடிவது இல்லை. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த வழியாக சென்று கொண்டிருந்த பயணியர் ஆட்டோ ஒன்று, ஏரியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. பகுதிவாசிகளின் பாதுகாப்பு கருதி, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.