/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்ணியம்பாளைத்தில் சாலை நடுவே மின்கம்பம்
/
கண்ணியம்பாளைத்தில் சாலை நடுவே மின்கம்பம்
ADDED : ஜூன் 28, 2024 02:39 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த காரோடை பகுதியில் இருந்து சோத்துப்பெரும்பேடு, நெற்குன்றம், பசுவன்பாளையம் வழியாக ஞாயிறு மற்றும் சீமாவரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையுடன் இணைவதால், இதன் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த சாலை விரிவாக்கம் செய்யும்போது, அங்கிருந்த மின்கம்பங்களை நகர்த்தி மாற்று இடத்தில் பதிக்காமல் அதை சுற்றி சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் மின்கம்பங்கள் உள்ள பகுதியை கடக்கும்போது, வலது, இடது என மாறி மாறி பயணிக்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன.
இரவு நேரங்களில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் மேற்கண்ட மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகள் விபத்து மற்றும் அசம்பாவிதங்களில் சிக்குவதை தவிர்க்க, இடையூறாக உள்ள மின்கம்பங்கள் சாலையோரத்தில் நகர்த்தி பதிக்க வேண்டும் எனவும், அதற்கான இடவசதி அங்கிருப்பதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.