ADDED : ஆக 02, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி : பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் வஷ்டி யாதவ், 31. கும்மிடிப்பூண்டிசிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், டி.வி.எஸ்., தொழிற்சாலை சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் மீது போதையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர், தடுமாறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். வெளியேற முடியாமல் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தார்.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.