/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி
/
பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி
ADDED : ஜூன் 29, 2024 08:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே வேர்க்காடு கிராமத்தில் வசித்தவர் பழனி, 55. செங்குன்றம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி நோக்கி டூ-- வீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கவரைப்பேட்டையில், நெரிசலான போக்குவரத்துக்கு இடையே சென்றவர், தடுமாறி கிழே விழுந்தார்.
அப்போது ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு லாரியின் பின் டயரில் சிக்கி உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.