/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
/
ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : ஆக 31, 2024 01:15 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வி.கே.ஆர்.புரம் ஊராட்சிக்குட்பட்டது பொந்தலாகண்டிகை கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், திருத்தணி-- நொச்சிலி மாநில நெடுஞ்சாலையோரம் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
அந்த குடிநீர் தொட்டி சேதம் அடைந்ததால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அதே பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் புதிய குடிநீர் தொட்டிக்கு பைப் லைன் அமைத்து, தண்ணீர் ஏற்றப்படுவதில்லை. இதனால் ஏழு ஆண்டுகளாக குடிநீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. மேலும் அரசு பணம் வீணாகி வருகிறது. தற்போது குடிநீர் தொட்டி சுற்றியும் செடிகள் வளர்ந்தும், தொட்டியும் பயன்படுத்தாமல் சேதம் அடைந்து வருகிறது. பழுதடைந்த குடிநீர் தொட்டியின் மூலமே தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
*