/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்த நிலையில் கால்வாய் அங்கன்வாடி குழந்தைகள் அவதி
/
திறந்த நிலையில் கால்வாய் அங்கன்வாடி குழந்தைகள் அவதி
திறந்த நிலையில் கால்வாய் அங்கன்வாடி குழந்தைகள் அவதி
திறந்த நிலையில் கால்வாய் அங்கன்வாடி குழந்தைகள் அவதி
ADDED : பிப் 28, 2025 01:10 AM

பூண்டி:பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சி, வரதாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
தற்போது, அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இக்கால்வாய், கான்கிரீட் பலகை கொண்டு மூடாமல் திறந்த நிலையில் உள்ளது.
இதனால், அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள், கால்வாயில் விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, கழிவுநீர் கால்வாய் மீது, கான்கிரீட் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.