sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் ஆனி கிருத்திகை விழா

/

திருத்தணியில் ஆனி கிருத்திகை விழா

திருத்தணியில் ஆனி கிருத்திகை விழா

திருத்தணியில் ஆனி கிருத்திகை விழா


ADDED : ஜூலை 03, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.

நேற்று பொதுவழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.






      Dinamalar
      Follow us