/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அண்ணாமலைச்சேரியில் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தல்ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

ADDED : ஆக 04, 2024 09:29 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி குப்பத்தில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்தில், 570 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய தலைவர் தேந்தெடுப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.
தலைவர் பதவிக்கு நான்கு பேர் விரும்பியதால், தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான தேர்தல் நேற்று, அண்ணாமலைச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் நடந்தது. தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு, படகு, இறால், மீன், நண்டு ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அமைதியான முறையில் தேர்தல் முடிந்தது.
காலை, 9:00மணிக்கு துவங்கி தேர்தல், மாலை, 6:00 மணிக்கு முடிந்தது. மொத்தம் உள்ள, 570 உறுப்பினர்களில், 538 பேர் ஓட்டு போட்டனர். அதில், கர்ணன் என்பவர், 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அசோக் என்பவர், 191 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கர்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.