/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெடிகுண்டு வீச்சு சம்பவம் மேலும் ஒருவர் கைது
/
வெடிகுண்டு வீச்சு சம்பவம் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 25, 2024 11:07 PM
சோழவரம்: சோழவரம் அடுத்த கோட்டைமேடு காலனியைச் சேர்ந்த தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், 38. இவர் வீட்டில், கடந்த 15ம் தேதி ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது.
அதே கும்பல், சோழவரம் அடுத்த சிறுணியம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ், 37, என்பவரது வீட்டில் கத்தியுடன் சென்று ரகளையில் ஈடுபட்டு, வீட்டு கதவு, கார் கண்ணாடி ஆகியவற்றை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்தது.
மேலும், சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் உள்ள லாரி பார்க்கிங் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து, லாரி டிரைவர் சிவா, என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது.
இதையடுத்து, சோழவரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 21, சுரேஷ்குமார், 21, கோபி, 25, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த சோழவரம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன், 26, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

