/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 28, 2024 11:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 12 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக நியமனம் செய்யப்பட உள்ளது.
முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணை பெறப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக, தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 18,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், ஜூலை 5க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.