/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
/
தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
ADDED : மார் 21, 2024 10:23 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் தேர்தல் வரும் ஏப்.,19ல் நடக்கிறது. தேர்தல் முன்னேற்பாடு பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவு விபரங்களை கணக்கெடுக்க பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. திருவள்ளூர், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, லோகேஷ் தாமூர் - 90031 24951, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் தொகுதிகளுக்கு, சஞ்சய் பகத்- 81221 16995 ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தேர்தல் செலவினம் குறித்து புகார் இருப்பின், மேற்கண்ட தொடர்பு எண்களில் புகார் அளிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

