/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி மஹாராஜா அக்ரசேன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
கும்மிடி மஹாராஜா அக்ரசேன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
கும்மிடி மஹாராஜா அக்ரசேன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
கும்மிடி மஹாராஜா அக்ரசேன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மார் 13, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, அருண் நகர் பகுதியில், மஹாராஜா அக்ரசேன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. அங்கு, 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழா நடந்தது.
பள்ளி முதல்வர் மாலதி தலைமை வகித்தார். துணை முதல்வர் சுசிலா, உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த கல்வி ஆண்டில், தேசிய மற்றும் மாநில அளவில், கிக் பாக்சிங், கைபந்து, டேபிள் டென்னிஸ், கால்பந்து, தடகளம், வில்வித்தை, யோகா உள்ளிட்ட போட்டிகளில் சாதனை படைத்த, 25 மாணவ மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.