/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றங்கரைகள் சேதம் மழை பெய்தால் உடையும் அபாயம்
/
ஆரணி ஆற்றங்கரைகள் சேதம் மழை பெய்தால் உடையும் அபாயம்
ஆரணி ஆற்றங்கரைகள் சேதம் மழை பெய்தால் உடையும் அபாயம்
ஆரணி ஆற்றங்கரைகள் சேதம் மழை பெய்தால் உடையும் அபாயம்
ADDED : ஜூன் 03, 2024 04:45 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆறு இரு கிளைகளாக பிரிந்து, பழவேற்காடு ஏரியில் முடிகிறது.
மழைக்காலங்களில் கடலில் கலந்து வீணாகும் ஆற்று நீரை சேமிக்கவும், பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் ஆற்றுநீருடன் கலப்பதை தடுக்கவும், கடந்த 2020ல், 13 கோடி ரூபாயில் ஆண்டார்மடத்தில் புதிதாக தடுப்பணை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு, கடந்தாண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
மேலும், தடுப்பணையின் இருப்புறமும், 2 கி.மீ., தொலைவிற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டன. கடந்தாண்டு மழையின்போது தடுப்பணை நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், தடுப்பணைக்கு கிழக்கு பகுதியில், ஆற்றின் கரைகள் சேதமடைந்து உள்ளன. கரை சீரமைப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத நிலையில், மண் சரிந்து கரையின் அகலம் குறுகி வருகிறது.
ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், சேதம் அடைந்து பலவீனமாக உள்ள ஆற்றின் கரைகள் உடையும் அபாயம் உள்ளது. இதனால், அருகில் உள்ள கிராமங்கள் ஆற்றுநீரில் மூழ்கும் நிலை உள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள ஆற்றின் கரைகளை பலப்படுத்த, பொதுப்பணித் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.