/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழவேடு கோவிலில் அர்ச்சுனன் தபசு
/
தாழவேடு கோவிலில் அர்ச்சுனன் தபசு
ADDED : ஜூன் 01, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கான தீமிதி விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
28 ம் தேதி சுபத்திரை அம்மன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் பனை மரம் நடப்பட்டு, மரத்தில் படிகள் அமைக்கப்பட்டன. பின் அர்ச்சுனன் தவம் புரிவதற்காக ஒவ்வொரு படிக்கும் பாடல்கள் பாடியவாறு தபசு மரம் ஏறினார்.
அப்போது திரளான பெண்கள் வழிப்பட்டனர். நாளை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது. 3ம் தேதி தர்மர் பட்டாபிேஷகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.