ADDED : ஜூலை 22, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல், ஆவடி அடுத்த பொத்துார், ரோஜா நகரில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது நினைவிடத்தில், பவுத்த முறைப்படி, 16ம் நாள் ஈமச்சடங்கு நேற்று செய்யப்பட்டது.
இதில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, மகள் சாவித்திரி பாய், அவரது உறவினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
சினிமா இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.