/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது
/
வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது
ADDED : ஜூலை 01, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருத்தணி அடுத்த நெமிலி காலனி பகுதியில் ஆந்திராவில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் நேற்று நெமிலி காலனியில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது, தட்சணாமூர்த்தி மகன் கார்த்திக், 27 என்பவர் வீட்டின் பின்புறத்தில், 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.