ADDED : மே 03, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த ராமண்தண்டலம் கிராமம் மொன்னவேடு பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா, 54. இவர் மகளிர் குழு கூட்டத்தில் வங்கி மூலம் பணம் கடன் வாங்கி கட்டாதவர்களின் பெயர்களை கூறியுள்ளார்.
அப்போது தங்கமணி என்பவர் பெயரை கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரது மகன் அன்பரசு காஞ்சனாவை ஆபாசமாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சனா கொடுத்த புகாரின் படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.