/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜாத்திரை விழாவில், உறியடித்தல் வழுக்கு மரம் ஏறும் போட்டி
/
ஜாத்திரை விழாவில், உறியடித்தல் வழுக்கு மரம் ஏறும் போட்டி
ஜாத்திரை விழாவில், உறியடித்தல் வழுக்கு மரம் ஏறும் போட்டி
ஜாத்திரை விழாவில், உறியடித்தல் வழுக்கு மரம் ஏறும் போட்டி
ADDED : மே 16, 2024 12:41 AM

திருத்தணி:திருத்தணி காந்திநகர் நல்லதண்ணீர் குளக்கரையின் அருகில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆண்டு கங்கையம்மன் ஜாத்திரை விழா நடந்தது. விழாவை ஒட்டி உற்சவர் அம்மன், பூகரக ஊர்வலம் நடந்தது.
மாலையில் கோவில் வளாகத்தில் உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறும் வீர விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு உற்சவர் கங்கை அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். மஞ்சள் காப்பு. சந்தன காப்பு நடத்தி, கும்பம் படையலிட்டு பெண்கள் வழிபட்டனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.