/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் குளமான பேருந்து நிலைய வாயில்
/
ஊத்துக்கோட்டையில் குளமான பேருந்து நிலைய வாயில்
ADDED : செப் 02, 2024 11:04 PM

ஊத்துக்கோட்டை,: ஊத்துக்கோட்டையில் உள்ள விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து பணிமனையில் இருந்து சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், திருப்பதி, நெல்லுார், சத்தியவேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமும், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்லும், இந்த பேருந்து நிலைய நுழைவாயில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், இவ்வழியே செல்லும் பேருந்தில் பயணிக்கும், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.
மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பேருந்தில் இருந்து இறங்கி பயணியர் வெளியே வர கடும் அவதிப்படுகின்றனர். சமீபத்தில், 5.41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய வளாகத்தின் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டது. அந்த பணியை செய்த அதிகாரிகள் , நுழைவாயில் சேதம் ஆனதை கண்டும் காணாமல் உள்ளனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் இனியும் துயில் கொள்ளாமல், பேருந்து நிலைய நுழைவாயிலை துரித கதியில் சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.