ADDED : ஆக 16, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,:திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி வெண்ணிலா, 50. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த துார்வாசுலு, 60 என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக வெண்ணிலா இருந்துள்ளதை அறிந்த துார்வாசுலு அங்கு சென்று தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். அருகில் இருந்தவர்கள் வெண்ணிலா வீட்டிற்கு வந்ததும், துார்வாசுலு அங்கிருந்து தப்பி ஓடினார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.