/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரஷ்யா பயணியை தாக்கி மொபைல் பறிப்பு தவித்தவருக்கு ஆட்டோ ஓட்டுனர் உதவிக்கரம்
/
ரஷ்யா பயணியை தாக்கி மொபைல் பறிப்பு தவித்தவருக்கு ஆட்டோ ஓட்டுனர் உதவிக்கரம்
ரஷ்யா பயணியை தாக்கி மொபைல் பறிப்பு தவித்தவருக்கு ஆட்டோ ஓட்டுனர் உதவிக்கரம்
ரஷ்யா பயணியை தாக்கி மொபைல் பறிப்பு தவித்தவருக்கு ஆட்டோ ஓட்டுனர் உதவிக்கரம்
ADDED : மே 05, 2024 11:06 PM
மெரினா: ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் ஏல்க்ஹான், 38. இவர், கடந்த டிசம்பரில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்து, டில்லி, கோவா சென்றுவிட்டு, நான்கு நாட்களுக்கு முன், ரயிலில் சென்னை வந்துள்ளார்.
நேற்று முன்தினம், விவேகானந்தர் இல்லம் அருகில் மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.
அப்போது, நான்கு பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கி, அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.
காயமடைந்தவர், என்ன செய்வது தெரியாமல், அங்கிருந்து ஆட்டோவில் சென்று, பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரித்ததில், சம்பவம் நடந்தது மெரினா கடற்கரை என்பதால், மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எப்படி செல்வது என தெரியாமல் தவித்த ஏல்க்ஹானிடம், அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் விசாரித்தார்.
இதையடுத்து அவரை, மெரினா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த ஓட்டுனர், வழிப்பறி சம்பவம் குறித்து போலீசாரிடமும் எடுத்துரைத்தார். ஆட்டோ ஓட்டுனரின் இந்த உதவியை, போலீசார் பாராட்டினர்.
போலீசார் விசாரணையில், பாதிக்கப்பட்ட ரஷ்ய பயணி, ஓராண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்ததும், மொபைல் போனை பறிகொடுத்ததும் தெரிவந்தது.
இதையடுத்து, வழக்கு பதிந்த போலீசார், ரஷ்ய பயணியை, மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னையைச் சுற்றி பார்க்க வந்த ரஷ்யா இளைஞரை தாக்கி, போன் பறித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.